கிடுகிடுவென மீண்டும் உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் இதோ!!

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது.

gold price

சென்னை :தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.60,000 வரை சவரனுக்கு உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், நேற்று (7.11.2024) இதுவரை இல்லாத அளவிற்கு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது.

நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கும் விற்பனை.

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,790க்கும், சவரனுக்கு ரூ. 62,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 103.00க்கும் விற்பனை ஆகி வருகிறது.

unknown node

gold price [File Image]