அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,640-க்கும், ஒரு கிராம் ரூ.7,705-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold price

சென்னை :தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000 வரை உயர்ந்த நிலையில் இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.800 குறைந்திருக்கிறது. நேற்று ரூ.58,400க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,600க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனைஆகிறது.

unknown node

gold price [File Image]மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,640-க்கும், ஒரு கிராம் ரூ.7,705-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம், கடந்த 7-வது நாளாக வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101ஆக விற்பனையாகி வருகிறது.