பைக்குகளின் விலையை மீண்டும் உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது.
இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ‘Hero MotoCorp’ குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜூலை 3 முதல் சுமார் 1.5% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.
unknown nodeHero MotoCorp [Image source : 5paisa]
குறிப்பாக, Splendor, Glamour, Pleasure, Passion pro மற்றும் பிற மாடல்களின் விலைகள் அதிகரிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்தான் ஹீரோ பைக்குகளின் விலை அதிகரிக்க உள்ளதாம்.
unknown nodeHero MotoCorp [Image source : Zee News]
இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 2 சதவீதம் விலையை உயர்த்திய அந்நிறுவனம், அதன் சமீபத்திய அதிகரிப்பின் சரியான அளவு குறிப்பிட்ட மாதிரிகள் மற்றும் சந்தைகளைப் பொறுத்து மாறுபடும் என்று ஹீரோ மோட்டோகார்ப் கூறியுள்ளது.
unknown nodeHero MotoCorp [Image source : Hero MotoCorp
இந்தியாவின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம், மூன்றாம் தரப்பு விற்பனையாளருடன் ஹீரோவின் உறவை மதிப்பிடுவதற்கு விசாரணைக்கு உத்தரவிட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கை கூறுகிறது.
