Rain Alert: அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை

Tamilnadu rains

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.