சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. முகப்பேர், அரும்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு அமைந்தகரை, வில்லிவாக்கம், அயனாவரம், மாதவரம், பாடி, ஓட்டேரி, ரெட்டேரி கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பகல் நேரத்தில் வெயில் அடித்து தற்பொழுது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
