"தொழில் தர்மத்திற்கான திருக்குறள்" எனும் பெயரில் திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்யும் சென்னை பல்கலைக்கழகம்!

The University of Chennai has introduced Thirukuralla as Thirukural for professionalism in the syllabus.

திருக்குறளை தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என சென்னை பல்கலைகழகம் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

திருக்குறளை தொழில் தர்மத்திற்கான திருக்குறள் எனும் பெயரில் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருக்குறள் தொழில் தர்மத்திற்கான திருக்குறள் எனும் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் பாடமாக அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை மாணவர்களுக்கு இந்த தொழில் தர்மத்திற்கான திருக்குறள் பாடமாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பல்கலைக்கழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள் மற்றும் உலகளாவிய கல்வி அலுவலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றை உருவாக்க சென்னை பல்கலைக்கழகம் முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.