சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். இன்று உலகம் முழுவதிலும் ஏழாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், ஆரோக்கியத்திற்கான யோகா எனும் தலைப்பில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. […]
திருக்குறளை தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என சென்னை பல்கலைகழகம் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. திருக்குறளை தொழில் தர்மத்திற்கான திருக்குறள் எனும் பெயரில் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருக்குறள் தொழில் தர்மத்திற்கான திருக்குறள் எனும் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் பாடமாக அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை மாணவர்களுக்கு இந்த தொழில் தர்மத்திற்கான திருக்குறள் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பு திருக்குறளை ஒப்புவித்து மாணவிக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகம் பரிசளிப்பு. மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், பள்ளிகளில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார், இந்நிலையில் ஊமச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்ற வீரபாண்டி அரசு பள்ளி மாணவி பவித்ரா, அமைச்சர் முன்னிலையில் சரளமாக திருக்குறளை ஒப்புவித்து, சாமர்த்தியமாக சைகைகள் உடன் விளக்கமளித்தார். இதனை கண்டு […]
கரூரில் உள்ள வள்ளுவன் பெட்ரோல் பங்கில் 20 திருக்குறள் சொன்னால் பொங்கல் திருநாள் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 31 வரை 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழின் பெருமை நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், கற்றறிந்தவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுவதற்காகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சில சான்றோர்கள் போட்டிகள் நடத்துவது போல தமிழுணர்வை ஊக்குவிப்பது சில நேரங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது […]
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தார். லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி லடாக் சென்று, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு, உரையாற்றினார். அப்போது அவர், “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்…” என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அந்த உரை, இந்தியளவில் பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழில் வெளியான கட்டுரையை […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்றுநாள் சுற்று பயணமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்த நூலை பிரதமர் மோடி, பாங்காக்கில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார்.