கோவிந்தா கோஷத்தில் மிதந்து வந்த தேர்...!!ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை திருவிழா கோலாகலம்..!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர் கடந்த 5ம்தேதி

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர் கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 9வது நாளான இன்று அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.மக்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வருகின்றது.

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கோவிந்தா கோஷத்தில் மிதந்து வந்த தேர்...!!ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை திருவிழா கோலாகலம்..!!