unknown node
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
நெல்லையில் நடைபெற்ற போட்டியில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் வெங்கட்ராமன் 41 ரன்களும், விவேக் 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய திருச்சி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.