தீபாவளியை ஸ்பெஷலாக்க சுவையான 7 கப் கேக்....!!!

பலகாரம் இல்லாத பண்டிகை எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்காது. தீபாவளி அன்று நாம் விதவிதமான பலகாரங்களை செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் தீபாவளியை இன்னும் ஸ்பேஷலாக்க

பலகாரம் இல்லாத பண்டிகை எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்காது. தீபாவளி அன்று நாம் விதவிதமான பலகாரங்களை செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் தீபாவளியை இன்னும் ஸ்பேஷலாக்க இந்த 7 கப் கேக் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 1 கப்

சர்க்கரை – 2 கப்

பால் – 1 கப்

தேங்காய் துருவல் – 1 கப்

நெய் – 1 கப்

செய்முறை :

ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து,  பாத்திரம் சிறிதளவு சூடேறியதும், கடலைமாவு, சர்க்கரை, பால், தேங்காய் துருவல், நெய் அனைத்தும் ஒன்றாகவே போட்டு, குறைந்த அளவு நெருப்பில் கிளறி கொண்டே இருக்க வேண்டும். அது பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் முந்திரி பருப்பை சிறிது சிறிதாக பொடியாக்கி அதனுள் போட்டு கிளற வேண்டும். சரியான பதம் வந்த பின் அதை நெய் தடவிய தட்டில் எடுத்து வைக்க வேண்டும். அது கெட்டியான பிறகு அழகாக வெட்டி பரிமாறலாம்.