தலைவலி நீங்க சில எளிய மருத்துவ முறைகள்...!!!

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் ஒரு நோய் தலைவலி தான். ஆனால் இதற்கு தீர்வு தெரியாமல் அலைமோதும் மக்கள் அதிகமானோர்.

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் ஒரு நோய் தலைவலி தான். ஆனால் இதற்கு தீர்வு தெரியாமல் அலைமோதும் மக்கள் அதிகமானோர்.

சில எளிய முறைகள் :

சூடான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து சிறிது உப்பு போட்டு பருக வேண்டும்.

புதினாக் கீரையின் சாற்றை நெற்றிப் பொட்டில் தடவலாம்.

சிறிதளவு சீரகம், ஒரே ஒரு கிராம்பு, 2 மிளகு இவற்றை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம்.

குப்பைமேனி இலையை சுத்தம் செய்து தூளாக்கி, ஒருசிட்டிகை எடுத்துபொடி போடுவது போல் மூக்கிலிட்டு நசியவிட கடுமையான தலைவலி தீரும்.

மூன்று கிராம் மிளகுபொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட தலைபாரம் நீங்கும்.