250 கோடி வசூலை நெருங்க காத்திருக்கும் மாஸ்டர்..!

It has been reported that the movie has grossed Rs 36 crore through Amazon in the digital frame of the master movie and has grossed Rs 248 crore worldwide.

மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 248 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

மேலும் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான வசூல் நிலவரத்தை பற்றி பார்க்கலாம், 140 கோடி செலவில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை டிஜிட்டல் பிரேமில் அமேசான் மூலமாக இந்த திரைப்படம் 36 கோடி வசூல் செய்துள்ளதாகவும் உலகளவில் 248 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

250 கோடி வசூலை நெருங்க காத்திருக்கும் மாஸ்டர்..!