தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. தெலுங்கு சினிமாவில் அசைக்கமுடியாத ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரின் படங்கள் வெளியானால் தெலுங்கு சினிமாவில் அன்றைய தினம் தீபாவளிதான் அப்படி கொண்டாடி தீர்த்து விடுவார்கள் அவரது ரசிகர்கள்.
unknown nodeசமீபத்தில் இவர் நடித்த பாரத் அனே நேனு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்ப்பை பெற்றது. வசூல் வாரிக்குவித்தது. இவருக்கு பெண் ரசிகைகளும் ஏராளம் பேர் உள்ளனர். அதில் ஒருவர்தான் சுலேனா என்ற பெண் இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண விழாவிற்கு மகேஷ்பாபுவும், அவரது மனைவியும் வாழ்த்து அட்டையில் கையெழுத்து இட்டு அவர்களுக்கு அனுப்பி வைத்தார். இதனை எதிர்பார்க்காத சுலேனா மணமேடையிலேயே கண்கலங்கினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.