நமது முகத்திற்கு அழகு சேர்ப்பதே நம் கண்கள் தான். கண்களுக்கு ஏதேனும் குறை ஏற்படும்போது நாம் மிகவும் வேதனைப்படுவதுண்ண்டு. ஏனென்றால் கண் நமது உடலின் முக்கிய பாகம். கண்களுக்கு அடியில் உள்ள தோல் மிகவும் மென்மையான தோல், நாம் அதிகமாக உஷ்ண காலங்களில் வெளியில் சுற்றும் போது நம் உடலும், உடலில் மிக மென்மையான பகுதியான கண்ணுக்கு அடியில் உள்ள தோலும் பாதிக்கப்படுகிறது.
கருவளையத்தை போக்க சில வழிகள் :
கேரட்டை வெட்டி கண்களில் வைத்துக் கொண்டால் கருவளையம் நீங்கும்.
எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்களுக்கு அடியில் ஒத்தி எடுக்க கருவளையம் நீங்கும்.
புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும்.
குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.
ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால் கருவளையம் நீங்கும்.