இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு இஸ்ரேலிய போர்விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியதால் தங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு சொந்தமான எஃப்- 16 ரக போர் விமானம் சிரியாவில் உள்ள ஈரானிய படைகளின் நிலைகள் மீது குண்டு வீசிவிட்டு திரும்பிய போது, சிரிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. போர் விமானத்தின் இழப்பு மிகப்பெரியதாக கருதப்படும் நிலையிலும் ஈரான் மற்றும் சிரியாவுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, இதனால் தங்களின் செயல் திட்டத்தில் சிறிதளவும் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் உருவான நாள் முதல் சிரியா அதனை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. அருகருகே இருக்கும் இரு நாடுகளுக்கும் இடையே 36 ஆண்டுகாலமாக மோதல் இருந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.