ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக இந்திய வம்சாவளி பெண் பிரீத்தி ரெட்டி பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றார்.
அவருடைய காதலனும் ஒரு பல் மருத்துவர் எனவும் அவரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக இந்திய வம்சாவளி பெண் பிரீத்தி ரெட்டி (32) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றார்.
ஆனால் அன்று இரவு மாநாடு முடிந்து விட்டு பிரீத்தி ரெட்டி வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது தங்கை நித்யா போலீசிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் ப்ரீத்தியின் முன்னாள் காதலனிடம் போலீசார் விசாரணை செய்தனர்.அப்போது மாநாடு முடிந்த பின்னர் ப்ரீத்தியும் முன்னாள் காதலனும் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமல்லாமல் அவருடைய காதலனும் ஒரு பல் மருத்துவர் எனவும் அவரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது தெரிய வந்தது.
இந்த விசாரணை முடிந்த பிறகு சிட்னியில் இருந்து இங்கிலாந்து நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த இளைஞர் திடீரென எதிரில் வந்த கார் மீது மோதி விபத்தில் இறந்தார்.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. உடனே அவர் தங்கியிருந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது காதலனுடன் அறைக்கு செல்வதற்கு முன்பு ப்ரீத்தி அங்கிருந்த ஒரு கடைக்கு சென்று வந்தார் என பதிவாகி இருந்தது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேல் இதுவரை ப்ரீத்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து தேடுதலை தீவிரப்படுத்திய போலீசார் ப்ரீத்தியின் கார் கிங்ஸ்போர்ட் பகுதியில் நிறுத்தி இருந்தது தெரியவந்தது.
விரைந்து சென்ற போலீசார் ப்ரீத்தியின் காரை கைப்பற்றி காரின் பின்பகுதியை திறந்து பார்த்தனர் அதில் ஒரு சூட்கேஸ் இருந்தது.அதை திறந்து பார்த்த போது ப்ரீத்தியின் உடலில் பல முறை கத்தியால் குத்திய நிலையில் இறந்து இருந்தார்.
அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
unknown node