முதிராமல் உதிரும் தேங்காய்க்கு தான் குறும்பை என்று பெயர். நம்மில் அநேகர் இளநீர் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால் அதனுடைய குறும்பையின் பயன் குறித்து நாம் யாருமே அறியாமல் தூக்கி எறிகிறோம். இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள். அதனுடைய பயன்கள் குறித்து பார்ப்போம்.
வயிற்று புண், வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல், தீப்புண்ணுக்கு குறும்பை மிக நல்ல மருந்து.
விஷம் குடித்ததால் குடல் மற்றும் வயிற்றுப பகுதியில் ரணமாகி இருப்பவர்கள், அதிகமருந்து உட்கொண்டு வயிற்றுப புண்ணால் அவதிப்படுபவர்கள், அதிக மது குடித்து குடல் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.
இதனை வெட்டி அவித்து வடிகட்டி காலை சாப்பிட்ட பின் கசாயமாக குடிக்க வேண்டும்.