ராகி (கேழ்வரகு) கேரட் -வெங்காய ஊத்தப்பம் செய்வது எப்படி என அறிவீரா?

This article contains a recipe of how to prepare ragi carrot onion uthappam - kezvaragu kerat vengaya uthappam seyvathu eppadi ena ariveera.

ராகி அதாவது கேழ்வரகு எனும் தானிய வகை அதிக ஆரோக்கியத்தை தரக்கூடியது; இந்த ராகியைக் கொண்டு சுவையான வித விதமான் உணவுகளை தயாரிக்கலாம். கேழ்வரகால் தயரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, உடலில் ஏற்பட்ட நோய்களின் தாக்கத்தைக் குறைக்க அதாவது சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

இந்த பதிப்பில் சுவையான கேரட் மற்றும் வெங்காயம் கலந்த ராகி ஊத்தப்பம் எப்படி செய்வது என படித்து அறியலாம்.

தேவையான பொருட்கள்

unknown node

ராகி தோசைமாவு – தேவையான அளவு, துருவிய கேரட்கள் – 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை

தயாரித்து வைத்த ராகி தோசை மாவினை தேவையான அளவு புளிக்க வைத்துக் கொள்ளவும்.

unknown node

மாவினை தவிர கூறப்பட்டுள்ள மற்ற தேவையான பொருட்களை ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும், வெங்காயம் கொண்டு எண்ணெய் தேய்த்து, ஊத்தப்ப பதத்தில் மாவை கல்லில் ஊற்றவும்.

கல்லில் ஊற்றிய ஊத்தப்பத்தின் மீது, கலந்து வைத்துள்ள கேரட், வெங்காய, மிளகாய் கலவையை தேவையான அளவு தூவி, எண்ணெயையும் தேவையான அளவு ஊற்றி நன்கு வேக விடவும்.

unknown node

தோசை ஒரு பக்கம் வெந்ததும், அதை மறுபக்கம் வேகவைக்க திருப்பி போடவும்.

இருபுறமும் நன்கு வெந்ததும் ராகி கேரட் – வெங்காய ஊத்தப்பத்தை தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகளுடன் பரிமாறவும்.

ராகி (கேழ்வரகு) கேரட் -வெங்காய ஊத்தப்பம் செய்வது எப்படி என அறிவீரா?