unknown node
திருநெல்வேலி:பீடித் தொழிலை அழிக்கும் மோடி அரசின் 28% GST வரி விதிப்பை கண்டித்து நெல்லையில், திரண்டு வந்த சுமார் 10000 பெண்கள் வெள்ளம் போல வந்து கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். பட்டாசு, தீப்பெட்டி, கடலை மிட்டாயை தொடர்ந்து பிடி தொழிலும் தெருவில் இறங்கி இப்போது போராட முன்வந்துள்ளனர்.இப்போராட்டத்தை சிஐடியு மாநில துணைத்தலைவர் கருமலையான் மற்றும் சிஐடியு மாநில செயலாளரும்,தூத்துக்குடி துறைமுக டிரஸ்ட்டியுமான ரசல் ஆகியோர் தலைமையேற்று நடத்தனர்.
unknown node