அனிதா மரணத்துக்கு மாணவர்கள் தண்டனை வழங்குவார்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகர், நடிகைகள் கண்டனம்

சென்னை:அனிதா மரணத்துக்கு மாணவர்கள் தண்டனை வழங்குவார்கள் என்று மத்திய மாநில் அரசுகளுக்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அதிக

unknown node

சென்னை:அனிதா மரணத்துக்கு மாணவர்கள் தண்டனை வழங்குவார்கள் என்று மத்திய மாநில் அரசுகளுக்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கல்வி படிக்க இடம் கிடைக்காத அரியலூர் மாணவி அனிதா மனம் உடைந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்திருப்பதுடன் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி உள்ளனர்.

ரஜினிகாந்த்: அனிதாவிற்கு நேர்ந்தது மிகவும் துரதிருஷ்டவசனமானது. தற்கொலை என்ற முடிவை எடுப்பதற்கு முன் அவரது மனம் எத்தனை வலியை கடந்திருக்கும். இதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை ெதரிவித்துக் கொள்கிறேன்.

கமல்: அனிதா தற்கொலை வேதனை அளிக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு வருகிறது என குடுகுடுப்பை ஆட்டியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மாணவியின் மரணத்தால் வெகுண்டெழுந்து போராட அனைவரும் முன் வர வேண்டும். நீட் விவகாரத் தில் வாதாட வர வேண்டியவர்கள் அனைவரும் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் சோர்வு அடையக்கூடாது. இதுபோன்ற துயரம் இனிமேலும் நிகழக்கூடாது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் காரணம். எனவே அரசுக்கு பாடம் கற்றுக்கொடுப்போம். இன்னும் கொடுமைகள் நடந்தால்தான் அரசுகள் தீர்வு தரும் என்றால் நீங்கள் வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.கோபம் வரத்தான் செய்கிறது. கண்ணீருடன் சேர்ந்து கோபத்தை நேர்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதை தோல்வி என்று நினைத்து விடாதீர்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். நியாயமான வழியில் போராடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். என்னுடைய நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் அனிதா வீட்டிற்கு சென்று என் சார்பில் இரங்கல் தெரிவிப்பார்கள்.

விஷால்: நீட் தேர்வு முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தவறான முடிவு எடுக்கக்கூடாது. தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டதை கேட்டு மனவேதனை அடைந்தேன். என்னை ஒரு சகோதரனாக நினைத்து மாணவர்கள் அணுகினால் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக உள்ளேன். மக்கள் மறந்து விடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். தமிழக மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும்.

பார்த்திபன்: அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் அனிதாபோல் இன்னும் இனியும் உயிர்களம் பலியாகும். இனி யாவும் நலமாகும் என நம்பி அனிதாவின் குடும்பத்தாருக்கு வருத்த செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்வது வன்முறையே. நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர். அம் மருத்துவரையே கொல்வது, பெருந்துயர். இனி மறு துயர், மறு தவறு நிகழும் முன் தடுக்க இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும்.

சிவகார்த்திகேயன்: இந்த தேசம் தகுதியுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது. என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.

விவேக்: உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்? இதற்கு மேல் என்ன படிக்க? ஒரு அருமை மாணவியை அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது.

நடிகை கஸ்தூரி: எதேச்சதிகார மத்திய அரசும், தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா.. வயிறு எரிகிறது.

சேரன்: ஏழைகளின் சார்பில் கண்ணுக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயிரமாயிரம் கனவுகளை அரை நொடியில் அழித்தாயோ அனிதா… செங்கொடி வழி நீயே..

இயக்குனர் பாண்டிராஜ்: ஆர்ஐபி போடுகிற வயசா இது? வேதனைப்பட வேண்டிய விஷயம் இல்லை, வெட்கப்பட வேண்டிய விஷயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்துப்போச்சு.

இயக்குனர் பா.ரஞ்சித்: ஒரு தலைமுறை பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்.ஜி.வி.பிரகாஷ்: கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா. இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இன்று வரையிலும் தமிழர்களே. எந்த தேர்விலும் வெற்றி பெறும் அறிவும் திறமையும் எம் மாணவர்களுக்கு உண்டு. பயிற்சி எடுக்கும் முன்னரே பரீட்சை வைத்து தோல்வியை ஏற்படுத்தியது வெட்க கேடான செயல். மருத்துவர் அனிதா மறைவுக்கு காரணமான அனைவருக்கும் எம் மாணவர்கள் தண்டனையை வழங்குவார்கள்.

ராகவா லாரன்ஸ்: அனிதாவின் மரணச் செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது. இப்படியொரு துயரமான முடிவை அவர் எடுக்க அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலையைப்பற்றி யோசிக்கவே வலிக்கிறது.

இயக்குனர் ராம்: நீட் ஒரு அரச பயங்கரவாதம். 12 வருட உழைப்பை கனவை அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.

தங்கர்பச்சான்: அனிதா கேட்கிறார். மாணவர்களின் குற்றமா? ஆட்சியாளர்களின் குற்றமா? தண்டிக்க வேண்டியது ஆட்சியாளர்களையா? மாணவர்களையா? நீதியை தரப்போது யார்?

சீனுராமசாமி: டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.

சூரி: படிப்பை இழந்தது நீயல்ல. இந்த தேசம்தான் ஒரு மருத்துவரை இழந்து விட்டது. கண்ணீர் அஞ்சலி தங்கையே.

நடிகர் சங்கம் அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது நினைத்து மிகவும் வேதனை அடைகிறோம். இனிமேல் அனிதா போன்றதொரு தற்கொலை மரணம் நிகழாமல் தடுக்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

அனிதா மரணத்துக்கு மாணவர்கள் தண்டனை வழங்குவார்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகர், நடிகைகள் கண்டனம்