அமெரிக்காவில் கிர்ஷ்ணஜெயந்தி கொண்ட்டாட்டம்!!!

அமெரிக்காவில் உள்ள மாசாசூட் மாநிலத்தில் ஆன்டோவர் என்னுமிடத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருத்தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

unknown node

அமெரிக்காவில் உள்ள மாசாசூட் மாநிலத்தில் ஆன்டோவர் என்னுமிடத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருத்தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணரின் சிறப்பு வழிபாடு மாலை 7 மணி முதல் 8.30 வரை நடைபெற்ற போது பக்தர்கள் கிருஸ்ணரின் நாம கீர்த்தனையாம் ‘ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! ‘ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே! என்ற கீர்த்தனையை முழு உணர்வுடன் லயித்துப் பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாரதத்தின் பல்வேறு மாநிலத்திலிருந்து அமெரிக்காவில் குடிபுகுந்த அமெரிக்கவாழ் இந்திய மக்கள் பலர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்இந்த தலம் சின்மியா மிஷன் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இத்திருத்தலத்தில் ஆஞ்சநேயர் முக்கிய மூலவராக அருள்பாலிக்கின்றார். மேலும் இங்கு இராமர் இலட்சுமணர் சீதை மற்றும் அருகில்; மற்றொரு ஆஞ்சநேயரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அருள்மிகு தெய்வம் துர்கா தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகில் எம்பெருமான் சிவபெருமான் நந்தியுடன் காட்சியளிக்கின்றார். இங்கு நவகிரக சன்னதியும் வினாயகருக்கென்று தனியாக இரண்டு மூர்த்திகளும் இங்கு அமைந்துள்ளன.

அமெரிக்காவில் கிர்ஷ்ணஜெயந்தி கொண்ட்டாட்டம்!!!