மதிப்பிற்குரிய மங்கைகளின் மனக்குமுறல் ..!

தயைகூர்ந்து எங்களின் மீதுஉங்களின் சுதந்திர தின வாழ்த்தின்  வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..!அவ்வார்த்தை ஒரு கொடிய அமிலமாய்எங்களை சுடுவதைஉங்களால்

unknown node

தயைகூர்ந்து எங்களின் மீதுஉங்களின்சுதந்திர தின வாழ்த்தின்

வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..!அவ்வார்த்தை ஒரு கொடிய அமிலமாய்எங்களை சுடுவதைஉங்களால் உணரமுடிகிறதா…?

பிச்சையெடுக்கும் எங்கள் கரங்களால்பதில் வாழ்த்துக்களை சொல்லிஉங்கள் கரங்களோடுஎங்கள் கரத்தை குலுக்க இயலாது..!

unknown node

சுதந்திர தின வாழ்த்தையுரைக்கும்உங்கள் குரலுக்குபாலியல் தொழிலுக்கு உங்களைகூவி இசைக்கும்எங்களின் குரலால்வாழ்த்திசைக்க இயலாது….!

குடும்ப தீண்டாமைசமூக தீண்டாமைஅரச தீண்டாமையெனும்முவ்வாளுமையில் மூழ்கிக் கிடக்கும்எம் பாலினத்தோரால்அம்மூவர்ண கொடியை உயர்த்திபல்லிலித்திட இயலாது..!

unknown node

உங்களைப் போன்று இல்லாத எங்களால்….இத்தேசத்தின் அனைத்து திசைகளிலும்வாழ்விழந்த எங்களால்….உங்களின் வாழ்த்தின் வன்மத்தைஉள்வாங்கிட இயலாது…!ஆம்…!உங்கள் வாழ்த்தில்கொடிய வன்மம் ஒளிந்திருக்கிறது..!எங்களைபொட்டைஒம்போதுஉஸ்..அலிஎனும் அவ்வன்மத்தை விடஎங்களிடம் நீங்கள் கூறும்சுதந்திர தின வாழ்த்தின் வன்மம்மிகக் கொடியது..!ஆகவே நண்பர்களே….கொடிய அமிலமாம்உங்களின் சுதந்திர தினவாழ்த்தின் வன்மத்தைஎங்கள் மீது நீங்கள் தெளிக்காதிருப்பீர்களாக…!

~கிரேஸ் பானு~

மதிப்பிற்குரிய மங்கைகளின் மனக்குமுறல் ..!