கரூர்:ஆளும் கட்சி, எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மிரட்டலை பொருட்படுத்தாமல், அமைச்சர் விஜயபாஸ்கர்இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.கரூர் மாவட்டத்தில், 2016 – 17ல், 64 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 7,796 இலவசசைக்கிள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவு மற்றும் அரசியல் நெருக்கடியால், சைக்கிள்கள் தாமதமாக வழங்கப்பட்டன.கரூர் மாவட்டத்தில், மற்ற மூன்று தொகுதிகளில் சைக்கிள் வழங்கப்பட்ட நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில், 17 பள்ளிகளில், 1,560 சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தன.இந்த தொகுதியின், எம்.எல்.ஏ.,வும், தினகரன்ஆதரவாளருமான, செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுகளை மீறி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.நேற்று, புகழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., – செந்தில் பாலாஜி பங்கேற்பர் என, அறிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியை தடுக்கும் வகையில், நேற்று காலை, 8:00 மணிக்கு நிருபர்கள் சந்திப்பில், ‘மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் ஆகியவற்றிலிருந்து, தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை’ என, செந்தில் பாலாஜி புகார் தெரிவித்தார்.அவரது மிரட்டலை, பொருட்படுத்தாமல் அமைச்சர் விஜயபாஸ்கர், மாணவ, மாணவியருக்கு நேற்று சைக்கிள் வழங்கினார்.விழாவிற்கு பின், கரூரில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:அரவக்குறிச்சி தொகுதியில், சைக்கிள்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என, தவறான தகவல் வெளியாகி உள்ளது. சைக்கிள்கள் வழங்குவது தொடர்பாக, செந்தில் பாலாஜியுடன் மாவட்ட நிர்வாகம் பலமுறை பேசி உள்ளது. அவர் ஒத்துழைப்பு வழங்காததால், நான்கு முறை விழா தள்ளி வைக்கப்பட்டது.சைக்கிள் வழங்கும் விழாவுக்கு, செந்தில் பாலாஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் இரண்டு நாட்கள் கழித்து வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்படி, அரவக்குறிச்சி தொகுதியில், 17 பள்ளிகளை சேர்ந்த, 1,560 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
மிரட்டலை பொருட்படுத்தாமல் விழாவில் பங்கேற்ற அமைச்சர்!!!!
கரூர்:ஆளும் கட்சி, எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மிரட்டலை பொருட்படுத்தாமல், அமைச்சர் விஜயபாஸ்கர்இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.கரூர் மாவட்டத்தில்,
unknown node