துபாய்லிருந்து 177 பயணிகள் உள்பட 184 பேருடன் புதன்கிழமை மதியம் வந்த தனியார் நிறுவன விமானம் சென்னையை நெருங்கும்போது ஒரு என்ஜினில் இருந்து புகை வர தொடங்கியது.
இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட விமானிகள் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கேட்டனர்.
அனுமதி கிடைத்தவுடன் அந்த விமானம் தரையிறங்கியது.விமானத்தில் இருந்த 177 பயணிகள் உள்பட அனைவரும் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டனர். தொழில் நுட்பக் கோளாறால் புகை வந்தது தெரிய வந்தது. இதைச் சீர்படுத்தியபின் மீண்டும் அந்த விமானம் துபாய்க்குப் புறப்பட்டுச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.