அமெரிக்காவின் இணைய‌ மேலாதிக்க‌த்திற்கு சீனாவில் ஆப்பு!

இனிமேல் கூகுள், பேஸ்புக் போன்ற‌ அமெரிக்க‌ இணைய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் சீனாவில் க‌டை விரிக்க‌த் த‌டை. அத‌ற்குப் ப‌திலாக‌ அதே சேவைக‌ளை வ‌ழ‌ங்கும் சீன‌ நிறுவ‌ன‌ங்க‌ள்

unknown node

இனிமேல் கூகுள், பேஸ்புக் போன்ற‌ அமெரிக்க‌ இணைய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் சீனாவில் க‌டை விரிக்க‌த் த‌டை. அத‌ற்குப் ப‌திலாக‌ அதே சேவைக‌ளை வ‌ழ‌ங்கும் சீன‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ஊக்குவிக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌.

Google, Facebook, Amazon போன்ற‌ அமெரிக்க‌ இணைய‌த் த‌ள‌ங்க‌ள், உல‌க‌ம் முழுவ‌தும் எல்லா நாடுக‌ளிலும் ஊடுருவியுள்ள‌ன‌. அவ‌ற்றிற்கு சீனாவில் த‌டை விதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து, அவ‌ற்றை சீனாவில் பார்க்க‌ முடியாத‌வாறு Great Firewall மூல‌ம் த‌டுக்க‌ப் ப‌டுகின்ற‌து.

அத‌ற்குப் ப‌திலாக‌ WeChat, Tencent போன்ற சீன‌ இணைய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌த‌ற்கு இட‌ம் கொடுக்க‌ப் ப‌டுகின்ற‌து. அமெரிக்க‌ முத‌லாளித்துவ‌ மேலாண்மைக்கு எதிரான‌ ந‌ட‌வ‌டிக்கை, இணைய‌த் த‌ள‌ங்களுட‌ன் நின்று விட‌வில்லை.

unknown node

Huawei, Oppo, Vivo, Xiaomi போன்ற‌ சீன‌ மொபைல் போன் நிறுவ‌ன‌ங்க‌ள், சீன‌த் த‌யாரிப்புக‌ளுக்கு ம‌ட்டுமே இந்த சேவை வ‌ழ‌ங்க‌வுள்ள‌ன‌. ஆப்பிள், சாம்சுங் நிறுவ‌ன‌ங்க‌ளுட‌னான‌ தொட‌ர்புக‌ளை முறித்துக் கொண்டு விட்ட‌ன‌.

இது பெரும் முத‌லாளித்துவ‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு இடையில் ந‌ட‌க்கும் மேலாதிக்க‌ப் போட்டி. இது தான் முத‌லாளித்துவ‌ம். இத‌னை அர‌சியல் நோக்கில் திரிபுப‌டுத்தி, “சீனாவில் இணைய‌த் த‌ணிக்கை” என்று சில‌ ஊட‌க‌ங்க‌ள் செய்தி வெளியிட்ட‌ன‌. முத‌லாளித்துவ‌த்தின் அரிச்சுவ‌டி கூட‌ தெரியாத‌ த‌ற்குறிக‌ள் தான், த‌மிழ் ஊட‌க‌த்துறையில் வேலை செய்கிறார்க‌ள்.

-கலை மார்க்ஸ்