unknown node
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக களமிறங்கியவர் விஜய் ஆன்டனி. அவரின் முதல் படம் ‘நான்’ ஹிட்டானதால், இசையமைப்பதை குறைத்துவிட்டு தொடர்ந்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
பிச்சைக்காரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பு பெற்றதால் தன் அடுத்த படமான ‘அண்ணாதுரை’ படத்தை தெலுங்கிலும் உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஆன்டனி இசையமைப்பாளர், ஹீரோ மட்டுமின்றி எடிட்டராகவும் பணியாற்றவுள்ளார்.
எடிட்டிங் ரசிகர்களுக்கு பிடித்தால் இனி அவரின் படங்களில் அவரே தொடர்ந்து எடிட்டராக செயல்படுவார் என்பது மட்டும் நிச்சயம்.