unknown node
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், புனித கடமையை நிறைவேற்றுவதற்காக, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் வசிக்கும் முஸ்லிம்கள், வாழ்நாளில் ஒரு முறையேனும், ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது, அவர்களது ஐந்து புனித கடமைகளில் ஒன்று. இதற்காக, மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கானோர் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.