unknown node
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசை வலியுறத்தியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போரோட்டத்தில் ஈடுபட்டனர். தமிழன்னை சிலை மீது ஏறிப் போராடிய அவர்களை போலீஸார் கடும் சிரமப்பட்டு அகற்றினர். பின்னர் சிலை முன்னர் கூடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களை போலீசார் தரையில் இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.இந்தப் போராட்டம் காரணமாக தமுக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது.