unknown node
பாகிஸ்தானின் மர்தார் நகரை சேர்ந்தவர் ஜூபியர் அகமது, 18. இங்குள்ள குவெட்டா பியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி சார்பில் 4 லிஸ்ட் ‘ஏ’ மற்றும் ‘டுவென்டி-20’யில் விளையாடி உள்ளார். சமீபத்தில், மர்தான் நகரில் நடந்த கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கினார். அப்போது, பவுலர் ஒருவர் பந்தை ‘பவுன்சராக’ வீசினார்.அசுர வேகத்தில் வந்த பந்து, ஜூபியரின் தலையில் பலமாக தாக்கியது. இவருக்கு முதலுதவி தரப்பட்டபோதும், சுய நினைவை இழந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். இவர், ‘ஹெல்மெட்’ அணியாமல் இருந்ததால் பந்து தாக்கியதாக கூறப்படுகிறது.