"கமல்ஹாசனுக்கு சமூக சிந்தனை இல்லை" தமிழிசை பேட்டி

அவனியாபுரம்: ''கமல்ஹாசனுக்கு சமூக சிந்தனை இல்லை. அவர் ஒரு சந்தர்ப்பவாதி,'' என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: கமல்ஹாசனுக்கு

unknown node

அவனியாபுரம்: ”கமல்ஹாசனுக்கு சமூக சிந்தனை இல்லை. அவர் ஒரு சந்தர்ப்பவாதி,” என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: கமல்ஹாசனுக்கு சமூக சிந்தனை இல்லை. இந்தியை எதிர்த்து போராடுகிறேன் என்றால், இனி இந்தி படங்களில் நடிக்காமல் இருப்பாரா. விளம்பரத்திற்காக இப்படி சொல்கிறார். இப்படியே அரசியல் பேசி, முதல்வராகலாம், என கனவு காண்கிறார். கமல்ஹாசன் வந்துதான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. விருதுநகரில் அவர் கூறியதாவது: கலாசார சீர்கேட்டிற்கு காரணமாக இருந்த கமல், தற்போது சும்மா இருக்கும் போது குரல் எழுப்புகிறார். அவர் அரசியலுக்கு வருவது பிரச்னை இல்லை. அவர் வந்து தான் அரசியலை காப்பாற்றவேண்டும் என்ற சூழல் இல்லை. ஊழல் குறித்த புகாரை மக்களை செய்ய சொல்கிறார்.’ சிறுமை’ கண்டு ஏன் அவர் இத்தனை நாள் பொங்கவில்லை. கமலை யாரும் கட்டிப்போடவில்லையே, என்றார்.