ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற உடனேயே, ராணுவத்தில் திருநங்கைகள்

unknown node

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற உடனேயே, ராணுவத்தில் திருநங்கைகள் சேர்வதை ஒத்திவைத்தார். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு இடமே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு, ராணுவத்தில் திருநங்கைகளைப் பணிபுரிய அரசு அனுமதிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நமது ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகளால், ராணுவத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது. நன்றி” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “எல்லாராலும் நாட்டுக்கு சேவை செய்ய முடியும். அவர்கள் யார் என்பது முக்கியமல்ல” என்று பதிவுசெய்துள்ளார்.

அந்நாட்டு மக்களும் ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்..