சென்னை: ”நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி, வரும், 27ல், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்,” என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், ஸ்டாலின் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது:’நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு உடனடியாக விலக்களிக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில், மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., சார்பில், வரும், 27ல், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தல் நடந்த போதே, இப்பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து, மாநில அரசு, அதற்கான செயல் வடிவத்தை உருவாக்கி இருக்க வேண்டும். தற்போது ஒன்றும், குடி முழுகிப் போய்விடவில்லை. விரைவில், துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலை பயன்படுத்தி, நிபந்தனை விதித்து, ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.இந்த ஊழல் அரசுக்கு, கமல் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு, நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கி உள்ளனர். சட்டப்படி உச்ச நீதிமன்றத்தால், தண்டிக்கப்பட்டு இருக்கும் நபருக்கு, நினைவு மண்டபம் கட்டுவது சரிதானா என்பதை, பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.தீர்மானங்கள் என்ன? : மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், ‘மக்கள் நலன் கருதி போராட்டங்களில் ஈடுபட்டதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
கமல் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை- ஸ்டாலின் பேட்டி!!
சென்னை: ''நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி, வரும், 27ல், மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்
unknown node