unknown node
சென்னை: கோட்டையை நோக்கி மனக்கோட்டையை டிவிட்டரில் கட்டினால் என்ன? கோவையில் கட்டினால் என்ன? என்று தமிழிசை கூறியுள்ளார். கோவை திருமண விழாவில் கமல் அரசியல் பேசியது குறித்து ட்விட்டரில் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். சினிமாவை கோட்டை விட்ட பின் வேறு என்ன கோட்டைதான் கட்ட எனவும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கத்தினர் கோட்டைக்கு செல்வதை போல செல்வேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியலை டிவிட்டரில் தொடங்கிவிட்டதாகவும் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.