ரியாத் : இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் இளம்பெண் ஒருவர் குட்டை பாவாடை அணிந்து பொது இடத்தில் நடந்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. குட்டை பாவாடையுடன் தான் பாலைவனத்திலும், வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைக்குள்ளும் நடந்து செல்லும் ஸ்னாப்சாட் வீடியோவை அப்பெண் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சவுதி அரேபிய டிவி ஒன்று டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளது. இச்சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என சிலரும், சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பெண் ஒருவர் இது போன்று ஆடை அணிந்தால் ஏற்றுக் கொள்ளும் போது, அந்நாட்டு பெண் நவநாகரீக உடை அணிந்ததில் என்ன தவறு என சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்களுக்கான கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கும் சவுதி அரேபியாவில் ஒரு பெண் இவ்வாறு நடந்திருப்பது அரசாங்கத்திற்கு அதிருப்தியாக உள்ளது.
குட்டை பாவாடை அணிந்ததால் பெண் கைது..
ரியாத் : இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் இளம்பெண் ஒருவர் குட்டை பாவாடை அணிந்து பொது இடத்தில் நடந்து சென்ற வீடியோ
unknown node