unknown node
கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கி போராடிய சேலம் பெரியார் பல்கலைகழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் கடந்த ஜூலை 17 ல் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வளர்மதியின் தந்தை மாதையன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.