ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக திருவாரூர் நன்னிலத்தில் போராட்டம் நடத்த முயன்றதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட வந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சங்க தலைவர் ஜெயராமன் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் ரவி என்பவரது வயிலில் போடப்பட்டுள்ள மோட்டாரில் தண்ணீரோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
திருவிடைமருதூர்: கச்சா எண்ணெய் எடுக்கப்படுவதை நிறுத்தக்கோரி, தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அங்குள்ள அய்யனார் கோயில் திடலில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்புகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தின்போது கதிராமங்கலம் மண்ணை பாதுகாக்க துர்க்கை அம்மன் கோயிலில் பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர். இன்று 132வது நாளாக பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யக்கோரி புதுகை மாவட்டம், நெடுவாசலில் இன்று 170வது நாளாக பொதுமக்கள் போராட்டம் […]
ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கி போராடிய சேலம் பெரியார் பல்கலைகழக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் கடந்த ஜூலை 17 ல் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வளர்மதியின் தந்தை மாதையன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
புதுக்கோட்டை:நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, 143-வது நாளாக அப்பகுதியினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். அதன்படி தினமும் வெவ்வேறு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 143-வது நாளாகவும் […]
சுதந்திரதினத்தையொட்டி கதிராமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக திருப்பனந்தாள் வட்டாரவளர்ச்சி உதவி அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். 300க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். எண்ணெய் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதால் கதிராமங்கலத்தில் ஒட்டுமொத்த நீர்வளம் மற்றும் நிலவளம் பாதிப்பு அடைந்துள்ளது. சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய்நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேறவேண்டும். மத்திய மாநில அரசுகள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் […]
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நிலம் வழங்கமாட்டோம் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் நெடுவாசல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். அதில் ஒவ்வொரு […]
புதுக்கோட்டை, ஆக.15- புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 125வது நாளாக திங்கள்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்தது.இரண்டாம் கட்டமாக 125-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டம் 71-ஆவது சுதந்திரதினமான இன்றும் (15.08.2017) காலை […]
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்த ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயராமன் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் விடுதலை செய்யப்பட்டனர். கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்தை தடைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஜெயராமன் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கதிராமங்கலத்தை விட்டு நிரந்தரமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், இதற்காக போராடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி […]
ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று பெண்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து மண்ணில் ஊற்றினர். அதில் விவசாயிகள் ஏர்பூட்டி உழவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 112வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திரளான விவசாயிகள், பெண்கள் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்தை் கண்டித்து கோஷமிட்டனர்.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் […]
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். போராட்டத்தின் போது கைதான 10 பேரையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.என்.ஜி.சி-யால் மாசுபட்ட குடிநீரை அருந்துவதன் மூலம் ஏற்டும் விளைவுகளை நாடகத்தின் மூலமாக விளக்கியும், மடிப்பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் குழந்தைகள் ஈடுபட்டனர்.
தங்கள் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 72 நாட்களாக போராடி வரும் கதிராமங்கலம் கிராம மக்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். கதிராமங்கலம் பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யக் கோரியும், ஓஎன்ஜிசி […]
கடலூர்: பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்திற்கு எதிராக 31ம் தேதி கடலூரில் மதிமுக போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார். மஞ்சக்குப்பம் அஞ்சலகம் அருகில் மல்லை சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். கடலூர், நாகை மாவட்டங்களில் மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மண்டலத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் எனவும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருவதால், மெரினா கடற்கரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் பைப் லைன்களில் சில நாள்கள் முன்னர் தீடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியைப் பார்வையிட வந்த அதிகாரிகளை அனுமதிக்க பொதுமக்கள் மறுத்துவிட்டனர். அங்கு வந்த போலீஸாருக்கும் போராட்டம் செய்யும் மக்களுக்குமிடையே தள்ளு […]
தஞ்சை:கதிரமங்கலத்தில் பதிக்கபட்டுருந்த எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அக்கிராமமக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கதிரமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 போரையும் விடுவிக்ககோரியும் அய்யனார்கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம்,நாகை புத்தூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் கடுமையாக பாதித்து கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.எனவே மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல்துறையை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி மக்களின் இயல்பு நிலையை உத்திரவாதப்படுத்த வேண்டும்.கைது செய்யப்பட்டவர்களை வெளியிட வேண்டும் என்ற போராட்டத்தில் மாவட்டச்செயலாளர் ப.மாரியப்பன் தலைமை வகித்தார்,பங்கேற்ப்பு மாவட்டத்தலைவர் மு.ஜோதிபாஸ்,மாவட்ட துணை தலைவர் அ.ஸ்ரீதரன் […]
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த கதிராமங்கலத் தில் கடந்த மாதம் 30-ம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், தர்ம ராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங் கட்ராமன் ஆகியோர் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகள் பணி செய்வதை தடுத்தது, மிரட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளை வித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் […]