இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: கே.ல ராகுல் விலகல்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல் விலகினார். இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3

unknown node

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல் விலகினார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நாளை துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் லோகேஷ் ராகுல்,25, இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் கொழும்புவில் நடந்த இலங்கை போர்டு லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் அரைசதமடித்த லோகேஷ் ராகுல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர், வலைப்பயிற்சியை புறக்கணித்தார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து இவர், காலேயில் நாளை துவங்கவுள்ள முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த பிப்ரவரி-மார்ச் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தோள்பட்டை பகுதியில் காயமடைந்த லோகேஷ் ராகுல், 10வது ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்ட இவர், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பின்னடைவு. ஏற்கனவே தமிழக துவக்க வீரர் முரளி விஜய், மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட வலியால் இலங்கைக்கு எதிரான தொடரில் விலகினார். இதனையடுத்து இந்திய அணிக்கு ஷிகர் தவான், அபினவ் முகுந்த் ஜோடி துவக்கம் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.