நடிகர் ஜான் விஜய் குறுகிய காலத்தில் விரைவாக அடையாளம் காணப்பட்ட ஹீரோ. வில்லனாக நடித்தாலும் காமெடியன் போல கலக்கியும் வருகிறார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு தேடி வந்ததாம். ஆனால் அப்போது துல்கர் சல்மான் நடிக்கும் CIA படத்தில் இவர் கமிட்டாகியிருந்தார்.
ஷுட்டிங் அமெரிக்காவில் நடைபெற்றதால் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. அவர்களின் மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன் என பேட்டியில் கூறியுள்ளார்.
ஏற்கனவே விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்திரியின் இயக்கத்தில் ஓரம் போ, வா படத்தில் நடித்திருந்தவர் இப்போது துல்கருடன் சோலோ படத்தில் நடித்து வருகிறார்.