விவேகம் விமர்சனம் : முருகதாஸ் விளக்கம்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்

unknown node

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இந்நிலையில் முருகதாஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

இதில் சமீபத்தில் ஒரு படம் (விவேகம்) விமர்சனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டதே? என கேட்டனர். அதற்கு முருகதாஸ் ‘விமர்சனம் என்பது எல்லோருடைய சுதந்திரம்.

unknown node

ஆனால், அது தனி மனித தாக்குதலாக இருக்க கூடாது, ஒரு படத்தின் நிறை, குறைகளையும், இப்படி இருக்க வேண்டும், இப்படி இருந்திருக்கலாம் என கூறலாம்.

அது தான் விமர்சனத்திற்கு அழகு’ என முருகதாஸ் கூறியுள்ளார். மேலும், தமிழ் கஜினியின் வில்லன் டபுள் ஆக்‌ஷனில் இருப்பார், ஒரு சில விமர்சனங்களால் தான் ஹிந்தியில் ஒரு வில்லனாக மாற்றி எடுத்தேன் எனவும் கூறியுள்ளார்.