சென்னை : கோடம்பாக்கம் புளியூர்புரத்தை சேர்ந்தவர் மைக்கேல்(35). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று காலை கோடம் பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி அருகே ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவரது பைக், ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபம் அடைந்த வாலிபர் தனது கையில் இருந்த ஹெல்மெட்டால் மைக்கேலை பலமாக தாக்கினார். இதில் நிலைக்குலைந்த மைக்கேல் கிழே விழுந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதற்குள் அடித்த அந்த வாலிபர் தப்பியோடினார். இதனிடையே அங்குள்ளவர்கள் மைக்கேலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். ஹெல்மெட்டால் அடித்த அயோத்தி குப்பத்தை சேர்ந்த பரத் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தால் நேர்ந்த விபரீதம் ஹெல்மெட்டால் ஆட்டோ டிரைவரை அடித்தே கொலை – வாலிபர் கைது
சென்னை : கோடம்பாக்கம் புளியூர்புரத்தை சேர்ந்தவர் மைக்கேல்(35). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று காலை கோடம் பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி அருகே ஆட்டோவில் சென்று
unknown node