கமலின் அடுத்த நகர்வு இதுவா அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்

தமிழக அமைச்சர்கள் உடன் மல்லுக்கட்டி அரசை விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களை விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில்

சமிபத்தில் கமலின் பெயர் தமிழக மக்களின் குரலாக மாறும் அளவுக்கு ஒரு ஆட்டம் கட்டி உள்ளார் இதனால் சற்று நடுங்கி போன அரசியல் வாதிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் கண்டபடி பேசி வருகின்றனர்

unknown node

தமிழக அமைச்சர்கள் உடன் மல்லுக்கட்டி அரசை விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களை விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் அரசியல் குறித்து தான் அதிகமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக நடிகர் கமல் தமிழக அரசின் ஊழல்கள் குறித்து அதிகமாக பேசியும், டுவிட்டரில் பதிவிட்டும் வருகிறார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தும் கமலை விமர்சித்தும் வருகின்றனர். ஆனால் கமல் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

இதனால் நடிகர் ரஜினிகாந்தை முந்திக்கொண்டு நடிகர் கமல் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் கமல் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கும் அமைச்சர்கள் கமலை விமர்சிக்க அவரது ரசிகர்கள் கொந்தளித்து அமைச்சர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தானர்.

இதனிடையே  அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி அரசியல் குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் என்ன நகர்வு நடக்கும் என்று அரசியல் வாதிகள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர் ..

ரஜினி அரசிலுக்கு வருவார் என்று ஊடகம் கிழப்பிவிட்ட ஒரு கரிஷ்மா இபொழுது கமலுக்கும் கிடைத்துள்ளது பார்க்கலாம் என்ன நடக்கும் என்று .

கமலின் அடுத்த நகர்வு இதுவா அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்