unknown node
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் கருணாரத்னே (16), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார். முகமது ஷமி ‘வேகத்தில்’ புஷ்பகுமாரா (1), குசால் மெண்டிஸ் (12) அவுட்டாகினர்.
உணவு இடைவேளையின் போது, இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து 270 ரன்கள் பின்தங்கி இருந்தது. கேப்டன் சண்டிமால் (26), மாத்யூஸ் (17) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி 2, அஷ்வின், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.