மகளிர் உலககோப்பை: இங்கிலாந்திடம் விழ்ந்தது இந்தியா...!

லண்டன்: பூனம் ராவுத் மற்றும் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் பெரும் ஏமாற்றத்தைத் தந்தனர். மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றது மிதாலி ராஜின் இந்திய

unknown node

லண்டன்: பூனம் ராவுத் மற்றும் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் பெரும் ஏமாற்றத்தைத் தந்தனர். மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றது மிதாலி ராஜின் இந்திய அணி.229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி, ஆனால் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.3 வது விக்கெட்டுக்காக 95 ரன்களை எடுத்த ரவுத் 86 ரன்களும், ஹர்மன் பிரீத் 51 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி 138/2 என்று இருந்தது. ஆகையால் 191/3 என்ற வேகத்தில் எளிதாக இலக்கை நோக்கி இந்திய அணி செல்லும் என்று தோன்றியது. ஆனால் 219 ரன்களைக் குவித்தபோது நடுத்தர மற்றும் கீழ் வரிசையில் உள்ள வீரர்களின் சொதப்பலால் இந்திய அணி தோல்வி கண்டது.இது இரண்டாவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றுள்ளது. முன்னதாக 2005 ஆம் ஆண்டில் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.