குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளுக்கு வழங்கபடும் முதல் உணவு தாய்ப்பால். குறைந்தது 6 மாதகாலமாவது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு தாய்ப்பால் 6 மாதம் கொடுக்கா விட்டால் குழந்தைகளின் உடலில் உள்ள நோய்எதிர்ப்பு சக்திகள் குறைந்து விடும்.
இதனால் அவர்கல் மிக எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அந்த வகையில் தாய்ப்பால் தான் குழந்தையின் மிக சிறந்த எதிர்ப்புசக்திக்கான அருமருந்தாகும். இதை விட சிறந்தது உலகில் வேறு எதுவும் கிடையாது.
தாய்ப்பால் குறைவாக சுரப்பதற்கான காரணங்கள்:
தாய்ப்பால் குறைவாக சுரப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.அதில் மிகவும் முக்கியமான காரணம் மனஅழுத்தம் தாய் மிகவும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே குழந்தையை மிகவும் கவனமாக பார்த்து கொள்ள முடியும்.
அதற்கு பிறகு அவர் சத்தான ஆகாரங்களை எடுத்து கொள்வது அவரின் உடலுக்கு மட்டும் மட்டுமல்ல குழந்தைகளின் உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும் தூக்கம் மின்மை, உடல் வறட்சி, போன்ற காரணங்களும் தாய்ப்பால் சுரக்க முடியாமல் போவதற்கு மிக முக்கிய காரணங்களாகும்.
தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு எளிய வழிமுறைகள்:
தாய்பால் சுரப்பதற்கு பல முக்கிய வழிமுறைகள் இருக்கிறது. அதனை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.
முட்டை மற்றும் மீன் :
unknown nodeதாய்ப்பால் சுரப்பதற்கு முட்டை மற்றும் மீன் மிக அதிக அளவில் உதவி புரிகிறது.முட்டை மற்றும் பாலில் இருக்கும் புரத சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவி புரிகிறது.
தாளிக்கீரை :
unknown nodeதாளிக்கீரை இலைகளை சூடான நீரில் போட்டு நன்கு கொதித்தவுடன் .இலைகளை நன்றாக பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி அந்த சாற்றை குடித்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
கோவை இலை:
unknown nodeகோவை இலையில் கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. தினமும் காலையில் கோவா இலையை வெள்ளைபூண்டுடன் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
பப்பாளி காய் :
unknown nodeபப்பாளி காயில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, பி, எ, கால்சியம் போன்ற பல சத்துக்கள் பப்பாளி காய் கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதய நோய் போன்ற பலவிதமான நோய்களையும் குணமாக்கும். பப்பாளி பழம் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாகும்.
பப்பாளிகாயின் தோலை நீக்கி விட்டு கடலை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பதற்கு பேருதவி புரியும்.
சதகுப்பை கீரை:
unknown nodeசதகுப்பை கீரைகளை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.மேலும் குழந்தைகளின் வயிறு அவதி படும் போது சதகுப்பை கீரையை 20 மி.லி சாறு எடுத்து கொடுத்து வந்தால் அவர்களின் வயிறு சம்பந்தபட்ட அனைத்து நோய்களும் தீரும்.
சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது. இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம்.
அருகம்புல் :
unknown nodeஅருகம்புல் நமது உடலில் தோன்ற கூடிய பலவிதமான பிரச்சனைக்ளுக்கு மிக சிறந்த மருந்தாகும்.இந்நிலையில் இது தாய்ப்பால் சுரப்பதற்கும் பெரிதும் உதவி புரிகிறது.
அருகம்புல் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாகும்.