இலங்கை அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார்.
unknown node30 வயதான மேத்யூஸ், கடந்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பங்கேற்ற போது காயம் அடைந்தார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர், களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் இரு டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இருந்தும் மேத்யூஸ் விலகுதாக அறிவித்துள்ளார். மார்ச் 8-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெறும் முத்தரப்பு டி 20 தொடரில் பங்கேற்கும் விதமாகவே தற்போது மேத்யூஸ் விலகி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.