தென் கொரியாவைச் சேர்ந்த 70 வயது பாட்டி யூடியூப்பில், அழகுக் குறிப்புகளைக் கூறி பிரபலமாகிவருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல், ‘கொரிய கிராண்ட்மா’ என்ற பெயரில் அழகுக் குறிப்புகளை உற்சாகமாகக் கற்றுக்கொடுக்கும் இவருக்கு, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
unknown nodeமார்க்கெட்டுக்குச் செல்லும்போது என்ன மாதிரியான மேக்-அப் போடவேண்டும் எனத் தொடங்கி, பல அழகுக்கலை குறிப்புகளை நகைச்சுவையாக அள்ளித்தெளிப்பதுதான் இந்தப் பாட்டி பிரபலமாவதற்கு காரணமாம். மனச்சோர்வில் பாதிக்கப்பட்ட இந்தப் பாட்டியை அதிலிருந்து மீட்கவே, அவரின் பேத்தி யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவிடுமாறு ஊக்குவித்திருக்கிறார்.
தற்போது, இவரின் பிரபலத்தைக் கண்டு, சாம்சங் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், இவரைத் தங்கள் நிறுவனங்களுக்கு மாடலாக்க காத்திருக்கின்றனர். தனது பிரபலத்தைப் பற்றி பார்க் கூறுகையில், “70 வயதில் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால், என் வாழ்க்கை 71வது வயதில்தான் ஆரம்பித்திருக்கிறது”, என்று குதூகலமாகக் கூறுகிறார்.