57 வருடங்களுக்கு பின் நீர்மின் திட்டம் அமைக்க உலக வங்கி இந்தியாவிற்கு அனுமதி..,

கடந்த, 1960 ம் ஆண்டின் சிந்து நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரை பயன்படுத்த இந்தியா, பாகிஸ்தானுக்கு பல கட்டுப்பாடுகள்

unknown node

கடந்த, 1960 ம் ஆண்டின் சிந்து நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரை பயன்படுத்த இந்தியா, பாகிஸ்தானுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இப்பகுதியில் நீர்மின் திட்டத்தை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 330 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட கிஷன்கங்கா திட்டம் மற்றும் 850 மெகாவாட் திறன் கொண்ட ரேடில் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நீர்பங்கீடு விவகாரம் தொடர்பாக ஏறக்குறைய 57 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே உலக வங்கியில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் பாக்.,கின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவின் நீர்மின் திட்டங்களுக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்ப ரீதியிலான விவகாரங்கள் குறித்து ஆலோசனை இந்த வாரம் நடக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

57 வருடங்களுக்கு பின் நீர்மின் திட்டம் அமைக்க உலக வங்கி இந்தியாவிற்கு அனுமதி..,