50 ஆண்டுகளுக்கு பின்பு கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண் பயணியின் கை!!!

பெர்லின், ஆக.1 ஆல்ப்ஸ் மலையில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கை, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணியுடையதாக இருக்கலாம்

unknown node

பெர்லின், ஆக.1 ஆல்ப்ஸ் மலையில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கை, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணியுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.விமான விபத்துக்கள் நடந்த இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி, தடயங்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேனியல் ரோச்சி, ஆல்ப்ஸ் பனி மலைப் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், சிதைந்த நிலையில் ஒரு கை, ஒரு கால் என 2 மனித உறுப்புகளையும், விமானத்தின் சில சிதைந்த பகுதிகளையும் கண்டெடுத்தார். அதன் புகைப்படங்களையும் வெளியிட்டார்.இந்த இடத்தில்தான் கடந்த 1966 ஆம் ஆண்டு ஏர் இந்தியா போயிங் விமானம் பம்பாயில் இருந்து நியூயார்க் செல்லும் போது மான்ட் பிளாங்க் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் அணு விஞானி ஹோமி பாபா உள்பட 117 பயணிகள் உயிரிழந்தனர்.அதற்கு முன்பு, அதே இடத்தில் 1950 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 48 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டிருக்கும் சிதைந்த நிலையில் இருக்கும் கை ஒரு பெண் ணுடையது என்றும், 1966 ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் பலியான பயணியின் கையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அதே பகுதியில் விமானத்தின் 4 ஜெட் எஞ்ஜினும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து செய்தி அறிந்ததும், சமோனிக்ஸ் பள்ளத்தாக்கின் உள்ளூர் அவசர சேவைப் பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்து ஹெலிகாப்டரில் அந்த உறுப்புகளை எடுத்துச் சென்று ஆய்வு நடத்திவருகின்றனர்.

50 ஆண்டுகளுக்கு பின்பு கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண் பயணியின் கை!!!