வேலூர் அருகே, கன்டெய்னர் லாரி மீது, கார் மோதிய விபத்தில், தாயும், இரண்டு மகன்களும் பலியாயினர். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் விஸ்வேஸ்வர், 58. இவரது மனைவி ஹேமரத்னா, 50, மகன்கள் தியாகராஜன், 30, கிரீஸ், 25, மகள் நவியா, 26, பேத்தி ஸ்ரீரேயா, 5, ஆகியோர், டெயோட்டா இடியாஸ் காரில், காஞ்சிபுரத்திற்கு பட்டுப் புடவை வாங்க, நேற்று பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டம், ஓச்சேரி களத்தூர் அருகே, நேற்று காலை, 9:00 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, சென்னை நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது, கார் திடீரென மோதியது. இந்த விபத்தில் ஹேமரத்னா, மகன்கள் தியாகராஜன், கிரிஸ் ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாயினர். விஸ்வேஸ்வார், மகள் நவியா, பேத்தி ஸ்ரீரேயா ஆகியோர், படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் பரிதாப பலி
வேலூர் அருகே, கன்டெய்னர் லாரி மீது, கார் மோதிய விபத்தில், தாயும், இரண்டு மகன்களும் பலியாயினர். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்து, காஞ்சிபுரம் அரசு
unknown node