இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மீது தாக்குதல்:3 பேர் கைது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருதினங்களுக்கு முன்னர்

unknown node

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருதினங்களுக்கு முன்னர் மனைவி, தனது மகளுடன் காரில் வீடு திரும்பினார். வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பாக காரை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். கேட்டை திறக்க ஊழியர் வந்துள்ளார். இந்நிலையில் ஷமி காருக்கு பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், வெகுநேரமாக கார் அங்கேயே நின்றது. இதனால் அவர்களால் நகர முடியவில்லை என கூறி ஷமி கார் ஓட்டிநரிடம் தகராறில் ஈடுபட்டனர். அந்த இளைஞர்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது.இதையடுத்து ஷமி காரிலிருந்து இறங்கி அவர்களை விலகிப்போகச்சொன்னார். ஆனால் எதிர்பாரத விதமாக அந்த இளைஞர்கள் ஷமியை தாக்கினர். தடுக்க முயன்ற ஓட்டுநரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். மனைவி, மகள் கண் எதிரிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து முகமது ஷமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இளைஞர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.